5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

0
268

ஆசிய கிண்ணம் டி20 தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் பந்துவீச்சை பந்தாடியுள்ளது.

ஆசியக் கிண்ணம் டி20 போட்டி தொடர் கடந்த 24ஆம் திகதி வங்கதேசத்தில் தொடங்கியது.

இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் டாக்காவின் மிர்ப்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சர்ப்ராஸ் அகமது அதிகபட்சமாக 25 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

குர்ரம் மன்சூர் 10 ஓட்டங்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 83 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

84 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே கடும் சவால் காத்திருந்தது.

துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இவர்களின் விக்கெட்டை முகமது ஆமிர் கைப்பற்றினார். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி-ரெய்னா ஜோடி விளையாடியது.

ரெய்னா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து விராட் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த யுவ்ராஜ்சிங் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதனைடையே சமி பந்துவீச்சில் 49 ஓட்டங்களுடன் எல்.பி. முறையில் கோஹ்லி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய டோனி தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.

LEAVE A REPLY