“மைக்ரேன்” எனும் ஒற்றைத் தலைவலியால் அவஸ்தையா? என்ன காரணம்

0
216

பக்கத்தில் அதிகமான வலி ஏற்படுவது ஒற்றைத் தலைவலியாகும். இந்த வலியானது பல மணிநேரங்கள் அல்லது ஒருநாள் முழுவதும் தொடரலாம், குறிப்பாக பெண்கள் இனப்பெருக்க காலத்தில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவர்.

அமெரிக்காவில் 36 மில்லியன் மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலியின் அறிகுறிகளானது நபர்களை பொறுத்து மாறுபடும்.

அதிகமான தலைவலி, தலையில் ஒருவித துடிப்பு, உடல் ரீதியான செயல்பாட்டின் போது வலி அதிகரித்தல், அன்றாம் வேலைகளை கூட செய்ய முடியாமல் திணறுதல்.

உடல்நிலை சரியில்லாமல் போதல், வெளிச்சம் மற்றும் சத்தத்தை கேட்கும்போது ஒரு வித படபடப்பு ஏற்படுதல், இருட்டிய அறையில் அமர்ந்திருத்தல்.

வியர்த்தல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை.

சிலருக்கு தாங்கள் இருக்கும் சூழ்நிலைகள் பிடிக்கவில்லையென்றால் ஒற்றைத் தலைவலி ஏற்படும், அதாவது அந்த இடத்தினை அவர்கள் தொந்தரவாக கருதுவார்கள்.

குழப்பமான எண்ணங்கள் தோன்றுதல், தங்கள் கண்முன் ஏதேனும் இருந்தாலும் அவை பார்வைக்கு புலப்படாதவாறு இருத்தல்.

பேசுவதற்கு சிரமப்படுதல், தோள்கள் மற்றும் கழுத்துப்பகுதி விறைத்துப்போயிருத்தல், விரும்பத்தகாத நறுமணம்.

எப்படி கண்டுபிடிப்பது?

“5, 4, 3, 2, 1 criteria” சோதனையை ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நடத்த வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்படவேண்டும்.

4 மணிநேரம் அல்லது 3 நாட்கள் வலி இருத்தல்.

ஏற்ற இறக்கமான வலி, வலிகள் மாறுபடுதல்.

குமட்டல், வாந்தி, ஒளி மற்றும் ஒலி உணர்திறன் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த சோதனையை மேற்கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலியை மருத்துவர்கள் கண்டுபிடிப்பது என்பது கடினமான ஒன்றாகும், ஏனெனில் மற்ற விளைவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

மண்டையின் உள்ளே இரத்தப்போக்கு ஏற்படுதல், மூளையில் உள்ள மென்படலங்களுக்கு இடையே இரத்தம் உறைதல், மூளையில் இரத்த நாளங்கள் விரிவடைதல்.

மூளை அல்லது தண்டுவடத்தில் அலர்ஜி ஏற்படுதல், சைனஸ் பிரச்சனை, கட்டிகள் ஏற்படுதல் போன்ற காரணங்கள் ஆகும்.

electroencephalography (EEG), computed tomography (CT), magnetic resonance imaging (MRI) போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதற்கு எவ்வித சிகிச்சையும் இல்லை, அதனால் இதிலிந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றலாம்.

அளவான தூக்கம்.

மன அழுத்தத்தை குறைத்தல், நிறைய தண்ணீர் குடிப்பது.

தியானம் மேற்கொள்ளுதல்

குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்தல், உதாரணத்திற்கு சொக்லேட், சிவப்பு ஒயின், ஆல்கஹால், காபி, சீஸ், சாஸ் வகைகள், ஐஸ் க்ரீம், வாழைப்பழம், மாமிசங்கள்.
முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்.

LEAVE A REPLY