இன்சுலின் மருந்தை கண்டுபிடித்தவர் மரணம்

0
103

இதய நோயாளிகளுக்கு பேஸ் மேக்கர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.

சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகனாக அமெரிக்காவில் பிறந்த மான், வரிசையாக பல தொழில்களை தொடங்கினார். அவர் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக துலங்கிதையடுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்து போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான சோலார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை தயாரித்த இவர் பெரும் கொடையாளராகவும் விளங்கினார்.

வெலேனிக்கா என்ற நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார்.

LEAVE A REPLY