வறுமையால் மக்கள் வாடும் நிலையில் ரூ.5 கோடி செலவில் பிறந்தநாள் கொண்டாடும் ஜிம்பாப்வே அதிபர்

0
119

உலகின் மிகவும் வயதான தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, வறுமையால் மக்கள் அல்லல்படும் அந்நாட்டில் இன்று தனது 92-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடி வருகிறார்.

1980-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துவரும் இவரது பிறந்தநாள் விருந்தில் சிங்கம், யானை மற்றும் காட்டெருமை கறியுடன் தடபுடலான விருந்து பரிமாறப்பட்டது. இந்நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் மிகவும் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வரும் வேளையில் சுமார் 50 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு முகாபே அளித்த இந்த விருந்து எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்த பிறந்தநாள் விருந்துக்காக ஏழை, எளிய மக்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை ஆளும்கட்சியினர் கட்டாய வசூல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் எட்டு லட்சம் அமெரிக்க டாலர் செலவில் (இந்திய மதிப்புக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய்) இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY