வெளி மாவட்ட மீனவர்களின் வருகையை எதிர்த்து மீனவர்கள் கவனயீப்பு போராட்டம்

0
155

திருகோணமலை -புல்மோட்டை பகுதியில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளி மாவட்ட மீனவர்களின் வருகையை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாகவும் (27) கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை -புல்மோட்டை சந்தியில் இடம் பெற்று வரும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2116 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் இப்புல்மோட்டை பகுதியில் 686 மீனவப் படகுகள் காணப்படுவதாகவும் கடற்றொழிலை நம்பி சீவியத்தை கழித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளி மாவட்ட மீனவர்கள் பருவகாலங்களில் புல்மோட்டைக்கு வருகை தந்து அதி நவீன கருவிகளை பயன் படுத்தி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதினால் இங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்தக் கோரியும் இவ்வார்பாட்டம் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது.

2016ஆம் ஆண்டில் வெளி மாவட்ட மீனவர்களை எமது பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளுக்காக வருகை செய்வதை அனுமதிப்பதில்லை என கடந்த 2015-03-16ம் திகதி எமது பகுதிகளில் உள்ள மீனவ சங்கங்களுக்கு எழுத்து மூலமாக வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுங்கள்.

எமது பிரதேச மீனவர்களின் உடமைகளைச் சேதமாக்குகின்ற எமது மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் கொலை கார வெளிமாவட்ட மீனவர்களை இங்கு அனுமதித்து எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே!

வெளியூர் மீனவர்களை அழைத்து வரும் உள்ளூர் முதலாளிமார்களே !எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போரட்டத்த்தில் ஈடுபட்டவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் எமக்கு சிறந்த தீர்வினை பெற்று தரா விட்டால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக புல்மோட்டை ஐக்கிய மீனவர் அமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட மீனவர் மகா சம்மேளனத்தின் உப தலைவருமான ஏ.எம்.கே .எம் .ஹனீபா தெரிவித்தார்.

இதேவேளை கவனயீப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு மீனவர்களின் படகுகள் தீக்கிரையாகக்ப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல்சலாம் யாசீம்

2304d4fd-b14a-4b5a-b9c8-96f3f61a4256 b885150c-3ebd-424f-96d5-ad5f2ad84d26 f4028006-331a-4acb-920f-6056794dd110

LEAVE A REPLY