ராஜித சேனாரத்னவைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி சிங்கப்பூர் திடீர் பயணம்

0
165

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் பார்வையிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்று வருகிறார்.

நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜித சேனாரத்னவுக்கு அங்கு மே்றகொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY