ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

0
118

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

குனார் மாகாணத்தின் தலைநகரான ஆசாதாபாத் பகுதியில் இருக்கும் பிரபல மார்க்கெட்டுக்குள் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்ததில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY