UPFA செயலாளர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால காலமானார்

0
71

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், முன்னாள் உயர் கல்வி அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால (79) இன்று (27) காலமானார்.

இவர், ஐ.ம.சு.மு.வின் பொதுச் செயலாளராக கடந்த வருடம் (2015) ஓகஸ்ட் மாதம் பொறுப்பேற்றிருந்தார்.

கடந்த 2007 தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர் கல்வி அமைச்சராக பதவி வகித்த இவர், கடந்த 2004 – 2010 காலப்பகுதியில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1936 டிசம்பர் 26 ஆம் திகதி பிறந்த இவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (27) காலமானார்.

(Thinakaran)

LEAVE A REPLY