20 ஓவர் ஆசியக்கிண்ணம்: அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி

0
192

20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மிர்புரில் அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேசத்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சவும்யா சர்கரும் (21 ரன்), முகமது மிதுனும் (47 ரன், 41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 9 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்களை எடுத்திருந்ததை பார்த்த போது, 150 ரன்களை கடக்கும் போல் தோன்றியது. ஆனால் அதன் பிறகு அமீரக பவுலர்கள், வங்காளதேசத்தின் ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டனர். 20 ஓவர்களில் வங்காளதேச அணி 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. மக்முதுல்லா 36 ரன்களுடன் (27 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன்கள், வங்காளதேசத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 82 ரன்களில் அடங்கினர். இதன் மூலம் வங்காளதேசம் 51 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது.

LEAVE A REPLY