FIFA தலைவரானார் ஜியானி இன்ஃபன்டீனோ

0
71

சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) புதிய தலைவராக சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபன்டீனோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஸெப் பிளாட்டர், பீபா தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியதையடுத்து புதிய தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

வேட்பாளர்கள்

ஜியானி இன்ஃ­பன்­டீனோ (45 வயது, சுவிட்­ஸர்­லாந்து, ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றிய பொதுச் செய­லாளர்),

டோக்­கியோ செக்ஸ்வேல் (62 வயது, தென் ஆபி­ரிக்கா, ஃபீஃபா பாகு­பாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்கை படை),

ஜெரோம் சேம்­பாஞே (57 வயது, பிரான்ஸ், ஃபீஃபாவின் முன்னாள் செய­லா­ளர்­நா­யகம்),

இள­வ­ரசர் அலி பின் ஹுசெய்ன் (40 வயது, ஜோர்தான், ஃபீஃபாவின் முன்னாள் உதவித் தலைவர், தலைவர் பத­விக்­கான முன்னாள் வேட்­பாளர்),

ஷெய்க் சல்மான் பின் இப்­ராஹிம் அல் காலிஃபா (50 வயது, பாஹ்ரெய்ன், ஃபீஃபா உதவித் தலைவர், ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ளனத் தலைவர்)
ஆகியோர் போட்டியிட்டனர். முதல் சுற்று வாக்கெடுப்புக்கு முன்னர் இப்போட்டியிலிருந்து தான் வாபஸ் பெறுவதாக டோக்கியோ செக்ஸ்வேல் அறிவித்துள்ளார். இவர் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இத் தேர்தலில் இலங்கை உட்பட 207 கால்பந்தாட்டச் சங்கங்கள் இத்தேர்தலில் வாக்களித்தன.

முதல் சுற்றில் கடும் போட்டி
முதல் சுற்றில் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபன்டீனோ, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவரான பஹ்யெ;னின் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

ஜியானி இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகளும் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுக்கு 85 வாக்களும் கிடைத்தன.

207 வாக்குங்களில் முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 138 வாக்குகளை எவரும் பெறாததால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் வெற்றி பெறுவதற்கு சாதாரண பெரும்பான்மை வாக்குகள் போதுமானவையாகும்.

இரண்டாவது சுற்றில் ஜியானி இன்ஃபன்டீனோ 115 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

(Metronews)

LEAVE A REPLY