ஜப்பானின் சனத்தொகை கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்தால் குறைந்துள்ளது

0
188

ஜப்பானின் சனத்தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 லட்சத்தால் குறைந்துள்ளதாக புதிய சனத்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

1920-ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக ஜப்பானின் சனத்தொகை எண்ணிக்கை வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.

ஜப்பானின் வீழ்ந்துவரும் பிறப்பு வீதமும் அந்நாட்டுக்குள் குடியேறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளமையும் இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

இதனால், சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்படும் என்று நீண்டகாலமாகவே சனத்தொகை ஆய்வு நிபுணர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இந்தப் பிரச்சனை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2050-ம் ஆண்டாகும்போது, ஜப்பானிய பிரஜைகளில் கிட்டத்தட்ட 40 வீதமானவர்கள் 65 வயதை தாண்டியிருப்பார்கள் அல்லது அதனைவிட வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று அரசாங்கத்தின் சனத்தொகை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

LEAVE A REPLY