நேபாளத்தில் 11 பேருடன் சென்ற விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது

0
175

நேபாளத்தில் 11 பேருடன் சென்ற சிறியரக விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட இருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

ஏர் கஸ்தாமன்டப் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் கலிகோட் மாவட்டத்தில் உள்ள சில்கயா என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் அவசரமாக தரையிறங்க முயற்சித்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் விமானி தினேஷ் நியூபானே, துணை விமானி சந்தோஷ் ரானா ஆகியோர் உயிரிழந்ததாகவும் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 23 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY