மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் ரகசியத்தை கூறுகின்றார் மஹிந்தானந்த

0
247

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்தால் நாங்கள் கட்சியிலிருந்து வெளியேறாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இதனைக் கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு தாமதமாவது ஏன் என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,

தேர்தல் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டுள்ளது. எனினும் நாங்கள் கூட்டு எதிர்க்கட்சியாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என்றார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் ரகசியம், இறுதி நேரம் வரை அவர்தான் வேட்பாளர் என்பதை வெளிப்படுத்தாமையே என்றும், அதனை வெளிப்படுத்தியிருந்தால் அவரின் வெற்றியை தடுத்திருக்க முடியும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

-AD-

LEAVE A REPLY