ஆசியாவின் மதிப்புமிக்கவர்கள்: போபர்ஸ் பத்திரிகை பட்டியலில் கோலி–சானியா மிர்சா

0
155

பிரபல பத்திரிக்கையான போபர்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீசுவரர்கள், உலகின் சக்திமிக்கவர்கள் போன்ற பட்டியலை வெளியிடும்.

அந்த பத்திரிகை, ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஆங்காங் ஆகிய நாடுகளில் ஆய்வு நடத்தியது.

இதில் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என 300 பேர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த பட்டியலில் 56 இந்தியர்கள் உள்ளனர். இதில் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிடித்துள்ளார். அவர் 2015–ம் ஆண்டு அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றும் கூறி உள்ளது.

பட்டியலில் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் சாய்னா நேவால் உள்ளனர்.

மேலும் அறிவியல், கலை, நிர்வாகம், தொழில் போன்றவற்றில் சாதித்தவர்களும் இடம் பெற்று உள்ளனர்.

LEAVE A REPLY