ஈராக்: ஷியா மசூதியில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி

0
96

ஈராக் நாட்டின் வடமேற்கில் ஷியா பிரிவு மக்கள் பெரும்பானமையாக வாழும் ஷுவாலா மாவட்டத்தில் உள்ள மசூதியில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

இங்குள்ள ரசூல் அல் ஆஸம் மசூதிக்குள் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த ஒருவன் பொத்தானை அழுத்தி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தான். குண்டு வெடித்த வேகத்தில் பலர் உடல் சிதறி கீழே விழுந்தனர்.

அவர்களுக்கு உதவிசெய்ய போலீசாரும், அப்பகுதி மக்களும் விரைந்து வந்தனர். அப்போது மேலும் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 15 பேர் பலியாகினர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

LEAVE A REPLY