பப்புவா நியூ குனியா: சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 11 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

0
151

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ குனியாவில் சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 11 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைநகரான போர்ட் மோர்ஸ்பை என்ற இடத்தில் இருந்து சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லாயே என்ற இடத்தில் உள்ள புய்மோ சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கைதிகள் நேற்று சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர்.

சிறையின் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் பலியாகினர். 17 பேர் குண்டு காயங்களுடன் பிடிபட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY