பாலமுனை பாலர் பாடசாலைக்கு NFGG நிதியுதவி

0
158

இக்ரஃ பாலர் பாடசாலையின் அவசரத் தேவைகளுக்கான நிதியுதவியினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வழங்கியது. இக்ரஃ பாலர் பாடசாலைக் கட்டிடத்தில் நேற்று (25.02.2016) காலை இடம் பெற்ற நிகழ்வின் போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் இந்த நிதித் தொகை பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிகப்பட்டது.

காத்தான்குடியை அண்டிய கிராமமான பாலமுனையில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மிக நீண்ட காலமாக இப்பாடசாலை இயங்கி வருகிறது. இப்பாடசாலைக்கான விஜயம் ஒன்றினை கடந்த 15.02.206 அன்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டிருந்தார்.

இப்பாடசாலைக்கான அவசரத்தேவையாக மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி என்பன பாடசாலை நிர்வாகத்தினரால் அப்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் இவற்றைத் தீர்த்து வைப்பதற்கான உதவி NFGG யிடம் கோரப்பட்டிருந்தது.

அத்தோடு இத்தேவைகள் தொடர்பான கோரிக்கைகள் பல கடந்த காலங்களில் ஏராளமான அரசியல் வாதிகளிடம் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை எந்த உதவியும் இப்பாடசாலைக்குக் கிடைக்க வில்லை எனவும் தமது விரக்தியினை அப்துர் ரஹ்மான் அவர்களிடம் பாடசாலை நிர்வாகிகளும், ஆசிரியைகளும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இப்பாடசாலையின் கஸ்ட நிலையினை தெரிந்து கொண்டதன் அடிப்படையில் இவற்றைத் தீர்ப்பதற்கான நிதியுதவியொன்றினை இம்மாத இறுதிக்குள் வழங்குவதாக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் குறித்த விஜயத்தின் போது வாக்குறுதியளித்திருந்தார். அதற்கமைவாகவே இன்று காலை இந்த நிதியுதவி இப்பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாடசாலையின் பிரதம நிர்வாகிகளில் ஒருவரான AM சியாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGG யின் மட்டக்களப்பு பிராந்திய சபையின் உறுப்பினர்களான ASM ஹில்மி, மற்றும் AGM பழில் அவர்களும் NFGG யின் பாலமுனைப் பிரதேச செயற்குழு உறுப்பினரான MM நஜ்மில் அவர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு பாலமுனைப் பிரதேச சிரேஸ்ட பிரமுகர்களான MIM இஸ்மாயில் , IL ஜெயினுள் ஆப்தீன் . AIM றிப்கான் ஆசிரியர் மற்றும் KMM றசூல் ஆகியோரும் இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த ஜெயினுலாப்தீன்,

‘எவராலும் கவனிக்கப்படாத நிலையில் மிக நிண்ட காலமாக இயங்கி வரும் இப்பாடசாலைக்கு NFGG யினால் வழங்கப்பட்டுள்ள இவ்வுதவி மிகப் பெறுமதியானது எனவும் இதற்கு இப்பிரதேச மக்கள் எப்போதும் நன்றியோடு இருப்பார்கள் எனவும் தெரிவித்த அவர் பாலமுனைப் பிரதேசத்தின் ஏனைய சமூக கல்வி அபிவிருத்தி விடயங்களிலும் NFGG யின் உதவியினை பெரிதும் எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY