பாலமுனைக்கு தேசியத்திலும் பெருமை தேடித்தந்தார் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில் (LLB)

0
210

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளச்சேனை பிரதேசத்திலுள்ள ஓர் சிறிய கிராமம் பாலமுனை ஆகும். இக்கிராமத்தில் இன்ஸா அல்லாஹ் எதிர்வருகின்ற மார்ச் மாதம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாடு இடம் பெற இருக்கின்றது.

மேலும் இத்தேசிய மாநாடு பாலமுனையில் இடம் பெறுவதற்கு முழு காரணகர்த்தாவாக முன்னால் தவிசாளர் அன்ஸில் விளங்குகின்றார் .

இம் மாநாட்டுக்கு பிரதம அதிதிகளாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய தலைவர் அல் ஹாஜ் றவூப் ஹக்கீம்,எதிர் கட்சி தலைவர் கௌரவ இரா சம்பந்தன் மற்றும் மலேசிய நாட்டின் முக்கிய அமைச்சர்கள் ,துருக்கி நாட்டின் பிரதான அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களும் அவர்களுடன் இந்த கட்சியினுடைய நிர்வாகிகள்,அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் இக் கட்சி இன்றும் வீரியமிக்க காரணமான போராளிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இவர்களையெல்லாம் பாலமுனை மன் சார்பாக நாங்கள் வருக வருக என வரவேற்கதயாராக இருக்கின்றோம்.

அத்தோடு மட்டும்மல்லாமல் பல அமைச்சர்களும்,மாகாண சபை அமைச்சர்களும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் இத் தேசிய மாநாட்டை தங்களுடைய ஊர்களில் நடத்துவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

அதையெல்லாம் முன்னால் தவிசாளர் அன்சில் தகர்தெறிந்து இம் மாநாட்டை நடத்தும் உரிமத்தை நமக்கு பெற்று தந்து இன்று பாலமுனை எனும் கிராமத்தை தேசியரீதியில் பேசும் பொருளாக ஆக்கிவிட்டார்.

இக் கட்சி அரசியல் கட்சியாக பதியப்பட்டு 27 வருடங்கள் கடந்துள்ள நிளையில் இம் மண்ணுக்கு இவ்வரம் கிடைத்துள்ளது இவ்வரம் கிடைப்பதை தடுப்பதற்கு பல காழ்புனர்ச்சிக்குரிய விடையங்களை சிலர் மேற்கொண்டிருந்தனர். அதையெல்லாம் தவிடுபொடியாக்கினார். முன்னால் தவிசாளர் அன்சில் இன்ஷாஅல்லாஹ் இனி ஒரு தேசிய மாநாடு இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா இல்லையா எனதெரியாது.

ஆனால் இவ்வாறான பிரமாண்ட மாநாட்டினை நடாத்தும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ் இம் மாநாட்டினை சிற்பபுற நாடத்துவது எங்களுடைய தார்மீக பொறுப்பாகும்.

அத்தோடு மட்டுமல்லாமல் இச் சிறிய கிராமத்திலிருந்து அரசியல் எழுச்சிக்கும் வித்திட்டார் என்றால் மிகையாகாது.

தவிசாளர் அன்ஸில் மக்கள் மனங்களை வென்றதுடன் இச் சிறிய கிராமத்திலிருந்து அரசியலுக்கு சென்று குறுகிய காலத்தில் வெற்றியும் அடைந்தார் இதனால் பல அமைச்சர்களும் பீதி அடைந்துள்ளனர் ஆனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாட்டு ஏடுகளில் பாலமுனையையும் இனைத்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். அத்தோடு மட்டும்இல்லாமல் தேசிய ரீதியில் இக்கிராமத்திற்கு அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிட்டார்.

இவரின் சேவை இக்கிராமத்திற்கு அளப்பரியது ஆகும். இவர் மூலம் இன்னும் பல அடையாளங்களும் அபிவிருத்திகளும் கிடைக்கவேன்டுமென்று அல்லாஹ்வை பிராத்திக்கின்றோம்.

LEAVE A REPLY