சம்பியனானது அறபா கோல்ட் அணி

0
210

அல்-அறபா விளையாட்டுக் கழகம் தமது கழக வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக கழக வீரர்களை 4 குழுக்களாக பிரித்து ஏற்பாடு செய்து நடாத்திய அறபா பிரீமியர் லீக் – 2016 இன் இறுதிப் போட்டி Arafa-Gold மற்றும் Arafa-Royal ஆகிய அணி களுக்கிடையில் இடம்பெற்றது இறுதி போட்டியில் Arafa-Gold அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் A.B. இல்யாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் உப தலைவர் B.பாயிஸ் (நவாஸ்) அவர்களும் , சிறப்பு விருந்தினர்களாக கழகத்தின் உயர் பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததோடு வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன்
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும்,தொடர்நாயகனாகவும்-எஸ்.எம்.அஸ்லம் தெரிவுசெய்யப்பட்டார்.

-இஜாஸ் ஜபீர்-

LEAVE A REPLY