(Poem) சுய பரிசோதனை

0
126

question-markஅல்லாஹ்வை வணங்குவதில்
ஆர்வம் குறைகிறதா?

இல்லாதோர்க்கு கொடுக்க
இரக்கம் வரவில்லையா?

அள்ளி அள்ளி உழைத்தும்
ஆசை அடங்கல்லையா?

உள்ளத்தில் ஹறாம் செய்ய
உவகை வருகிறதா?

எல்லார் வாழ்விலும்
ஏதும் குறை தெரிகிறதா?

கல் மண் கட்டிடத்தில்
கவர்ச்சி பெருகிறதா?

கில்லாடி வேலைகளில்
கிடைக்கிறதா இன்பம்?

குல்லாக்கள் பயான்களாலே
கோபம் வருகிற்தா?

கொல்லும் சிகரட் மதுவை
கொஞ்சம் மனம் நாடுகிறதா?

சல்லி உழைப்பதுதான்
சதாவும் லட்சியமா?

செல்லக் கூடா இடத்துக்கு
செல்ல மனம் தவிக்கிறதா?

சொல்லத் தகா வார்த்தைகள்
சொல்லிலே வருகிறதா?

பள்ளிக்கு செல்வதிலே
பராமுகம் ஆகிறதா?

பிள்ளையுடன் பேசுவதிலும்
பேஷ்புக் இனிக்கிறதா?

பொல்லு வைத்த கடன்களை
பொருட்டாகஎடுக்கல்லையா?

நல்ல மனிதர் பெயர்களினை
நாறடிப்பதில் இன்பமா
…………………………..?

மெல்ல நம் உள்ளம்
கல்லாகிக் கருப்பாகி
பொல்லாத நரகிற்கு
போகத் தயாராகுவதை
இந்தச் செயல்களும்
இன்னும் பல பிழைகளும்
உணர்த்தி நிற்பதை
உணர்ந்து தெளிந்து
திருந்தி வாழ்வதற்கு
தீர்மானம் எடுப்போம்.

(MOHAMED NIZOUS)

LEAVE A REPLY