கல்வியின் முன்னேற்றத்துக்கு புதிய தொழில்நுட்பங்கள்!

0
157

உலகின் முன்னணி நாடுகளில் உள்ள பிள்ளைகளுடன் இலங்கை பிள்ளைகளும் முன்னேறிச் செல்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை நாட்டினுள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் உலகில் பல்வேறு நாடுகளுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (25) முற்பகல் நடைபெற்ற மாலபே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் தாம் ஜெர்மனி மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அந்நாடுகளின் உயர் தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அந்நாடுகளுடன் அறிவு பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள பிள்ளைகள் புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும் அறிவு ரீதியாக பலப்படுத்தி அவர்களுக்கு நாளைய உலகை வெற்றிகொள்வதற்குத் தேவையான சகல வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

கணனி மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு பாட நெறிகள் தற்போது மாலபே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதோடு, சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ரத்நாயக்க உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY