பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால பந்து வீச்சு பயிற்சியாளராக மக்மூத் நியமனம்

0
147

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வரும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஸ்தாக் அகமதுவுக்கு சோர்வு காரணமாக அடுத்த 2 போட்டி தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் வங்காளதேசத்தில் நடந்து வரும் முதலாவது 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

மற்றும் இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால

பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அசார் மக்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பாகிஸ்தான் அணியினருடன் உடனடியாக

இணைந்து கொள்கிறார் என்று அணியின் மானேஜர் மொயின்கான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY