காணாமல் போன மலேசிய விமானத்தின் மீது வழக்கு

0
167

காணாமல்போன மலேஷிய விமானம் எம்எச் 370-இல் பயணித்த ஒருவரின் மனைவி அந்த விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கவனக்குறைவாக இருந்தது, ஒப்பந்த அம்சங்களை மீறியது எனக் குற்றஞ்சாட்டியுள்ள கே.ஸ்ரீதேவி என்ற அந்தப் பெண் இழப்பீடாக 7 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை கோரியுள்ளார்.

இந்த வழக்கில் மலேஷிய விமானப் போக்குவரத்து ஆணையத்தையும் அவர் ஒரு எதிர்மனுதாரராக சேர்ந்துள்ளார்.

அந்த விமானத்தின் பயணம் மற்றும் அது செல்லும் பாதையை அந்த ஆணையம் சரியாக கண்காணிக்கவில்லை என்று தனது மனுவில் அந்தப் பெண் கூறியுள்ளார்.

எம்எச் 370 விமானம் காணமால்போய் அடுத்த மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இவரைப் போன்று பலர் வழக்கு தொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விமானம் காணாமல்போய் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் முன்னர் வழக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY