கடைசி போட்டிக்கு பின் பிராண்டன் மெக்குல்லத்தின் உருக்கமான பேச்சு

0
148

நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் நேற்று முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

34 வயதான மெக்குல்லம் 101 டெஸ்டில் 6453 ரன்னும், 260 ஒருநாள் போட்டியில் 6083 ரன்னும் எடுத்தார். சிறந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் ஜொளித்தார். இன்றைய போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் முன்னிலையில் பேசிய மெக்குல்லத்தின் உரை,

சக அணி வீரர்களை பற்றி…

கடந்த சில ஆண்டுகள் மகிழ்ச்சியானவை என்று கருதுகிறேன். நாம் சில சாதனைகளை செய்துள்ளோம், சில போட்டிகளில் தோற்றுள்ளோம். ஆனால் முக்கியமான விஷயம் நாம் நமது ஆன்மாவை திரும்ப பெற்றுள்ளோம். நாம் இணைந்து விளையாடிய நாட்களை என் வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன். அடுத்து வரும் சில ஆண்டுகளில் இந்த அணி பல சாதனைகளை படைக்கும்.

வித்தியாசமாக விளையாட வேண்டும் என்ற கனவை ஏற்றுக்கொண்டதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆஸ்திரேலியா அணியைப் பற்றி…

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நினைத்தோம். ஆனால் நீங்கள் எங்களை நொறுக்கிவிட்டீர்கள். ஏன் நீங்கள் உலகின் நம்பர் ஒன் அணி என்பதையும் நிருபித்துவீட்டிர்கள். உங்கள் எதிர் காலத்திற்கு என் வாழ்த்துகள்.

நியூசிலாந்து ரசிகர்களை பற்றி…

நாங்கள் ஒரு அணியாக ஏற்ற தாழ்வுகள் கடந்து வந்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அணியின் செயல்பாடு உங்களை பெருமை கொள்ளவைத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த நாட்டின் பிரதிநிதியாக முகத்தில் புன்னகையுடன் சில சாதனைகளை செய்ய முயற்சித்தோம்.

குடும்பம் பற்றி…

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்கை சிரமமானது. ஆண்டின் பெரும் பகுதி நேரம் வீட்டில் இருக்க முடியாது. குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இதை செய்ய முடியாது.

கடந்த 14-ஆண்டுகளாக என் கனவை வாழ்ந்து பார்க்க ஆதரவு கொடுத்தீர்கள். லிஸ்(மனைவி) நான் உன்னிடம் கூறியது போல் என் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்து இந்த கடனை திருப்பி அடைப்பேன்….

LEAVE A REPLY