அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்

0
447

இஸ்லாமியர்களாக மீட்டு தாருங்கள்

நான் கிழக்கு மாகாணத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் எனது சமூகம் காலாகாலமாக பின்பற்றுகின்ற பெண்களிடம் வீடு வாங்கும் திருமண முறையை ஒழித்து ஆண்கள் வீடு கட்டி திருமணம் செய்யும் முறையை எங்களுக்குள் ஏற்படுத்தி தாருங்கள்.

எங்கள் முன்னோர்கள் பின்பற்றிய இத்திருமண முறையானது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண் பட்டதும் சமூகத்தில் பல் வேறு வகையான சமூக சீரழிவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி பெண் வீட்டாரின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்கின்ற மிக மோசமான முறையாகவும் இருந்து வருகின்றது.

எங்கள் சமூகம் கல்வி துறையிலும் மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்று நவீன கால வாழ்க்கை முறைக்குள் தங்களை உட்புகுத்தி கொண்டாலும் பெண்களிடம் வீடு வாங்கும் மோசமான சீதனத்தை இன்று வரை கை விடவில்லை.

இதன் விளைவு உலமாக்கள் முதல் படித்த, பாமர மக்கள் வரை திருமணம் என்றால் பெண்ணுக்கு வீடு இருகின்றதா? என்ற கேள்வியுடன் தான் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளபடுகின்றன.

இது அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைக்கும் எதிரானதும் ஹராமானதும் மான திருமண முறையாகும்.

இத் திருமண முறையால் அதிகமான ஏழை பெண்கள் சிறிய வயதிலேயே நிர்பந்தத்தின் பேரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் சுமார் 17 மணி நேரம் வேலை செய்து பெரும் ஊதியமான (18000-20000) ரூபாய்வை கொண்டு தான் 10 அல்லது 12வருடங்களில் ஒரு சிறிய வீட்டை கட்டி கொண்டு திருமணம் பந்தத்தில் இணைகின்றனர் அப்போது அவர்களுக்கு 30 வயதையும் தாண்டி விடுகிறது.

அது மாத்திரமன்றி சில பெற்றோர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்து விட்டால் இரு வீடுகள் கட்ட வேண்டும் (ஒரு வீடு கட்டுவதற்கு 15-20 இலட்சம் )என்றால் இரு வீடுகள் கட்டுவதற்கு (30-40 இலட்சம்) தேவைபடும் இதனை சாதாரண தொழில் செய்யும் யாராலும் இலகுவாக பெற முடியாது.

இருந்தும் சகல வலிகளையும் தாங்கி கொண்டு தனது மகள்களின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக 18 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்து தனது ஆயுள் முழுவதும் வெளிநாடுகளில் கழிக்கும் எத்தனை பெற்றோர்கள் (50 வயதை தாண்டியும்)

நிம்மதியை இழந்து வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து மகள்களின் திருமணத்தை முடித்து விட்டு இனியாவது நாட்டில் தன் மனைவியோடும் மகள்கலோடும் கடைசி காலத்தை கழிப்போம் என்ற ஆசையுடன் வரும் முதுமை கணவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. என்னவென்றால் அவனுக்கும் மனைவிக்கும் அவன் கட்டிய 40 இலட்சம் பெறுமதியான வீட்டில் உரிமையின்றி அடுத்த மாதமே வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டு வாடகை வீடுகளில் உழைக்க முடியாத பருவத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை.

இதை போன்று தான் ஓவ்வொரு வருடமும் புதிய புதிய யாசகம் கேட்கும் பெற்றோர்களை ஓவ்வொரு மணமகன்களும் உருவாக்கி கொண்டு இருகின்றனர்.?

இஸ்லாமிய வழிகாட்டிகளே அல்லாஹுக்கு பயந்து கொள்ளுங்கள் நீங்கள் தான் எங்களை வழி நடத்தும் தகுதியுடன் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து அலட்சியமாக இருந்து விட வேண்டாம்.

ஒரு சாரார்(பெண் வீட்டார் )இன்னொரு சாராருக்கு (மணமகன் வீட்டார் )ருக்கு தனது முழு பொருளாதாரத்தை கொடுத்து விட்டு அநாதையாய் தெரிவில் நிற்கும் நிலையை இல்லாமல் ஆக்கி தாருங்கள்.

கணவன் தானே மனைவிக்கு மஹர் முதல் , உணவு , உடை , வீடு கொடுக்க வேண்டும் இது தானே இஸ்லாமிய வழிகாட்டல் அப்படி இருக்கும் போது பெண்கள் ஏன்? வீடு, பணம் கொடுக்க வேண்டும்.

பள்ளிவாசல் கடிதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று கட்டளை இட முடிந்த உங்களால் ஏன்? பெண்களிடம் வீடு வாங்கி. திருமணம் செய்யும் எந்த திருமணத்தையும் நடத்த கூடாது என்று ஓவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் கட்டளை இட முடியாமல் போனது..?

உலமாக்களே அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடம் முறையிடுகிறேன். நீங்கள் இவ்விடயத்தில் நீதமாக நடந்து கொள்ளுங்கள் பெண்களிடம் வீடு வாங்கும் திருமணத்திற்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள் உலமாக்களே இது உங்களின் கவனத்திற்கு.

-Bùhr Sìyàñ– எனும் Facebook நண்பரின் வேண்டுகோளை பயனுள்ள அவசியமுள்ள விடயம் என்பதால் நாம் இதை பிரசுரிக்கிறோம்.

LEAVE A REPLY