முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.ஏ. ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு

0
190

முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை காத்தான்குடியில் திறப்பதற்கான நடவடிக்கைக்காக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ எச் ஏ ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இது பற்றி தெரிவித்துள்ளதாவது.

முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் திறக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு நாம் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்படி கிளை அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறக்கப்படவேண்டும் என்பது கிழக்கு மக்களின் நீண்ட கால தேவையாக உள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள ஊர் என்ற வகையில் காத்தான்குடியில் திறக்கப்படுவது பொருத்தமானதாகும்.

இதற்கான முயற்சிகளை மேற்டிகொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் உலமா
கட்சி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

ஜுனைட்.எம்.பஹ்த்

LEAVE A REPLY