இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ண தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி கிடைத்தது

0
263

6–வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8–ந் தேதி முதல் ஏப்ரல் 3–ந் தேதி வரையும் நடக்கிறது. மார்ச் 19 தர்மசாலா நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடுவதில் தயக்கம் காட்டியது. இந்தியாவுக்கு வருவதற்கு அந்நாட்டு அரசின் அனுமதிக்கும் காத்திருந்தது.இதனால், இந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்பதில் நிச்சயமற்ற நிலை நிலவி வந்தது.

இந்த நிலையில்,இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டியது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹ்ராயர் கான் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறும் போது, இந்தியாவுக்கு அணியை அனுப்ப அரசு அனுமதி அளித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளோம். உலக கிண்ணம் பார்க்க வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் விசா சலுகைகள் அளிக்கப்படும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY