எனது பெயருக்கு முன்னாள் 1993 குண்டு வெடிப்பு வழக்கு பற்றி எழுதாதீர்கள்: சஞ்செய் தத் கோரிக்கை

0
145

இன்று காலை சிறையில் இருந்து நன்னெடத்தை அடிப்படையில் விடுதலையான பாலிவுட் நடிகர் சஞ்செய் தத், தான் தீவிரவாதி இல்லை எனவும், 1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கசப்பான நினைவுகளில் இருந்து விடுபட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இன்று மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சஞ்செய் தத் கூறியதாவது:- “ நான் தீவிரவாதி அல்ல. தடா மற்றும் குற்றச்சதி போன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து நான் விடுவிக்கப்பட்டேன். உச்ச நீதிமன்றமும் ஐபிசி பிரிவு 120-பியில் இருந்து என்னை விடுவித்தது. ஆயுத சட்டத்தின் கீழே எனக்கு தண்டனை கிடைத்தது.

என்னைப்பற்றி குறிப்பிடும் போது, எழுதும்போதே, எனது பெயருக்கு முன்னால், 1993 குண்டு வெடிப்பு வழக்கு பற்றி எழுதாதீர்கள் என நான் ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன். அந்த வழக்கில் எனக்கு தொடர்பு கிடையாது. கடந்த 23 ஆண்டுகளாக இந்த தருணத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன். சட்டத்தை பின்பற்றி அனைத்தையும் நான் செய்தேன்” என்றார். புனே எரவாடா சிறையில் இருந்து வெளியே வந்தது, பூமிக்கு முத்தமிட்ட சஞ்செய் தத், எனது இந்திய தாயை நான் நேசிக்கிறேன்.நான் இங்குதான் பிறந்தேன். இந்தியனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்தார்.

சஞ்செய் தத்திடம், பரோல் வழங்கப்பட்டது தண்டனை குறைக்கப்பட்டது பற்றி விமர்சனங்கள் எழுப்பட்டது பற்றி கேள்வி எழுப்பிய போது, ” இது தவறான கருத்து, ஒரு பிரபலமாக இருந்தாலும் கூட என பல சலுகைகள் மறுக்கப்பட்டன. பிரபலமானவர் என்ற அந்தஸ்து எனக்கு எதிராக கூட சென்றது எனலாம்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY