மின் தடையால் வீதி சமிக்ஞைகள் செயலிழப்பு: வாகனப் போக்குவரத்து நெரிசல்

0
223

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக வீதி சமிக்ஞை கட்டமைப்புகள் செயற்படாமையால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை மீளப் பெற்றுக்கொள்ள 2 அல்லது 3 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் விநியோகத் தடை ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி. W.A.D.S. விஜயபால தெரிவித்தார்.

-NF-

LEAVE A REPLY