மகுடம் சூடியது பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்!

0
229

இது வரை காலமும் எல்லே போட்டிகளில் மட்டும் தேசிய மட்டத்துக்கு தெரிவாகியிருந்த பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் வரலாற்றில் முதற்தடவையாக அட்டாளச்சேனை கோட்ட மட்ட கிரிகட் விளையாட்டுப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இறுதிப்போட்டியில் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயமும் அட்டாளச்சேனை தேசிய பாடசாலையும் மோதிக் கொண்டது. இதில் நாணயசுழற்ச்சியில் வெற்றி பெற்ற மின்ஹாஜ் அணித்தலைவர் என்.றிக்காஸ் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணித்தலைவர் றிக்காஸும், பாஸும் களம் இறங்கினர். ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய றிக்காஸ் அரைச்சதம் கடந்தார். இதில் 7 ஆறு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 14 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். மேலும் ம்பாஸ் 5பந்துகளை எதிர் கொன்டு 22 ஓட்டங்களை பெற்றார். அத்தோடு குசல் என்று செல்லமாக அழைக்கப்படும் சிப்றாஸ் தான் சந்தித்த முதல் பந்தில் 6 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக 5 ஓவர்கள் நிறைவில் 87 ஓட்டங்களை பெற்றனர். இவ்வணியின் நம்பிக்கையை நட்சத்திரங்களான நௌசாத் ,முஜாஹித் ஆகிய இவர்களின் இமாலய 6 ஓட்டங்களை பார்க்கமுடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய அட்டாளச்சேனை தேசிய பாடசாலை 87 என்ற இமாலய ஓட்ட இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.

பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் வெற்றிவாகை சூடி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அணித்தலைவர் என்.றிக்காஸ் (அல் அறபா அணியின் சிரேஸ்ட வீரர் என்.றபீக்கின் சகோதரன் ஆவார்)தெரிவு செய்யப்பட்டார்.

இஜாஸ் ஜபீர்

LEAVE A REPLY