சில பகுதிகளில் மீண்டும் மின்சாரம்; 6 மணியளவில் முழுமையாக வழமைக்குத் திரும்பும்

0
170

நாடு முழுவதும் திடீரென ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை சில பகுதிகளில் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை 06.00 மணியளவில் நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை சீர் செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று பிற்பகல் ஒரே நேரத்தில் நாடுபூராகவும் மின்சாரம் தடைப்பட்டமை குறித்து விஷேட விசாரணைகளை மேற்கொண்டு, முடிந்தளவு விரைவில் அந்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY