20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் யுவராஜ் சிங்

0
212

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் வங்கதேச அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மிர்புரில் நேற்று நடந்த முதல் ஆசியக்கிண்ண டி20 போட்டியில் இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 7 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச டி20 போட்டியில் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் 1000 ஓட்டங்கள் கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் 4வது இடத்தில் இருக்கிறார்.

முதல் 3 இடங்களில் கோஹ்லி (1223 ஓட்டங்கள்), ரெய்னா (1136 ), ரோஹித் சர்மா (1108) ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் யுவராஜ் சிங் 24வது வீரராக உள்ளார்.

LEAVE A REPLY