(Poem) லைக் செய்தல்

0
107

downloadபைக்கை லைக் செய்யும்
பையன்கள் அதிகம்
மைக்கை லைக் செய்யும்
மெளலவிமார் அதிகம்
தைக்காவை லைக் செய்யா
தவ்ஹீது அதிகம்
லைக்கை லைக் பண்ணும்
பேஷ்புக்கி அதிகம்

பொய்யை லைக் செய்யும்
புறோக்கர்மார் அதிகம்
டையை லைக் செய்யும்
டாடிகள் அதிகம்
ஜொள்ளை லைக் செய்யும்
ஜொப்பில்லார் அதிகம்
பில்லை லைக் செய்யா
பேஷண்ட்கள் அதிகம்

சும்மாவை லைக் செய்யும்
சோம்பேறி அதிகம
ஜும்மாவை லைக் செய்யும்
அம்மா தாயே அதிகம்
புகழை லைக் செய்யும்
பொலிட்டீசியன் அதிகம்
சகலனை லைக் செய்யா
சகலைகள் அதிகம்.

போயாவை லைக் செய்யும்
பொதுமக்கள் அதிகம்
ஈயாதார் லைக் செய்யார்
இரந்து கேட்பவனை
பேயை லைக் செய்வார்
பிஸ்னஸ் லெப்பைகள்
லைக் செய்வோர் மிகக் குறைவு
வாழ்கின்ற வாழ்க்கையினை.

MOHAMED NIZOUS

LEAVE A REPLY