விரைவில் குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி: ரவி கருணாநாயக்க

0
193

ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று மாலை ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY