மத்திய கிழக்கிலிருந்து திரும்பிய மட்டக்களப்பு இளைஞர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

0
315

மத்திய கிழக்கிலிருந்து திரும்பிய மட்டக்களப்பு இளைஞர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் மாட்ட நாபடாளுமன்ற உறுப்பினர் என்.

ஸ்ரீநேசனின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் எனும் இளைஞனே கட்டார் நாட்டிலிருந்து இலங்கை வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கட்டார் நாட்டுக்குச் சென்று நாடு திரும்பிய அவர் மீண்டும் கடந்த 2013ம் ஆண்டில் தொழில் நிமித்தம் கட்hர் நாட்டுக்குச் சென்றிருந்தார்.

இவரது கைது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீநேசனிடம் அதிவித்ததையடுத்து தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் நாடாளுமனை;ற உறுப்பினர் தெரிவித்தார்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

LEAVE A REPLY