கிண்ணியா நீதிமன்றம் மட்டும் இதுவரை ஏன் மீளத் திறக்கப்படவில்லை: இம்ரான் எம்.பி வினா

0
176

கிண்ணியா நீதிமன்றக் கட்டடத்தை நிர்மாணிக்க பொருத்தமான காணியை அடையாளப் படுத்தினால் கட்டட நிர்மாணப் பணிகளை உடன் ஆரம்பிக்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (நேற்று ) புதன்கிழமை பாராளுமன்றத்தில் நீதி அமைச்சரிடம் கிண்ணியா நீதிமன்றக் கட்டடம் தொடர்பாக எழுப்பிய வாய்மொழி மூல வினாவுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இயங்கி வந்த சுற்றுலா நீதிமன்றம் கடந்த கால பயங்கரவாதச் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. நாட்டில் சமூகநிலை ஏற்பட்டபின் இதுபோன்று மூடப்பட்ட நீதிமன்றங்கள் மீளத் திறக்கப்பட்டன. எனினும் கிண்ணியா நீதிமன்றம் மட்டும் இதுவரை மீளத் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக இம்ரான் எம்.பி பாராளுமன்றத்தில் வாய்மொழி வினாவை எழுப்பியிருந்தார்.

கிண்ணியா நீதிமன்றத்துக்காக புதிய கட்டடம் நிர்மாணிக்க ஏற்பாடு உள்ளது. எனினும் இதற்குப் பொருத்தமான காணி இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை. எனவே காணியை அடையாளப்படுத்தினால் கட்டட நிர்மாணப்பணிகளை விரைவில் ஆரம்பித்து நீதிமன்றத்தை மீளத் திறக்க முடியும் என நீதி அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.

விரைவில் பொருத்தமான காணியை வழங்குதற்கான முன்னெடுப்புகள் தற்போது இம்ரான் எம்.பியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY