மாலியில் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு: 3 வீரர்கள் பலி – 2 வீரர்கள் படுகாயம்

0
143

ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ வீரர்கள், ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் குறி வைத்து தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள டிம்புக்டு நகரில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் இரவில் பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 வீரர்கள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர்கள், அங்கிருந்து தப்பினர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் படுகாயம் அடைந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.

LEAVE A REPLY