கலைமகள் வித்தியாலய தொழினுட்ப ஆய்வு கூடத்தில் 60 கணினிகள் செயலிழக்கும் நிலை

0
203

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலத்தில் உள்ள தொழினுட்ப ஆய்வு கூடத்திற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 60 கணினிகள் இன்னமும் இயக்கப்படாமல் செயலிழந்து போய்க் கிடப்பாக வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என். இராஜதுரை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் கடந்த கால உள்நாட்டுப் போர் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிரதேசத்திலுள்ள இந்தப் பாடசாலையில் கடந்த 20.02.2013 இல் தொழிநுட்ப ஆய்வு கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும், பாடசாலை நிருவாகம் எடுத்துக் கொண்ட பல்வேறு அயராத முயற்சிகளின் பயனாக இந்தப் பாடசாலை கடந்த 01.05.2014 இல் 1 ஏ.பி. தரப்படுத்தல் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள தொழினுட்ப ஆய்வு கூடத்தில் இப்பிரதேச பின் தங்கிய மாணவர்களின் தொழினுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்கில் கடந்த 19.09.2014 இல் 60 கணினிகள் வழங்கப்பட்டன.

எனினும், இக்கணினிகள் இந்த ஆய்வு கூடத்தை வந்தடைந்து இப்பொழுது சுமார் ஒன்றரை வருடங்கள் கழிகின்ற போதும் இந்தக் கணினிகளை இயக்குவதற்கான மின்சார இணைப்புக்கள் பொருத்தப்படாததால் அவை செயலிழந்து போகும் நிலைக்கு வந்துள்ளன.

இது விடயமாக நாம் மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சு வரை விடயத்தைத் தெளிவுபடுத்தி உடனடித் தீர்வு காணுமாறு கேட்டிருந்தும் இதுவரை எதுவித பயனும் கிடைக்கவில்லை.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்த தொழினுட்ப ஆய்வு கூடத்தை இயங்க வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

0bd528e1-fca4-4d17-84dd-c661f23058c1 09ab7317-aebc-4d5f-9a2c-cd426e46db6d 9ad0d290-4f4f-4a1a-a20e-73d21100dba5 98bceb0f-2540-4054-98f6-9e135153554a 4010f4fb-3d4a-492a-a9a0-2595febb3dd0 70422c37-3cb5-4ade-879a-d213eff6496d

LEAVE A REPLY