இலங்கையை ஆசியா பிராந்தியத்தின் பிரகாசிக்கும் ஓளியாக தனது நாடு கருதுகின்றது: ஜோன் கீ

0
160

இலங்கையை ஆசியாபிராந்தியத்தின் பிரகாசிக்கும் ஓளியாக தனது நாடு கருதுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். தனது நாடு இலங்கையில் தனது பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த திட்டங்களை நாங்கள் அவதானித்துள்ளோம்,

நாங்கள் உங்களின் மக்களிற்கும், நியுசிலாந்து இலங்கை உறவுகளிற்கும் பாரிய வாய்ப்புகளை காண்கின்றோம், இலங்கை அதிகரித்துவரும் செல்வச்செழிப்பு அதிகரித்துவரும் நாடாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY