சவூதி, பஹ்ரைன் பிரஜைகள் லெபனான் செல்ல தடை

0
261

லெபனானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேறும்படியும் அல்லது அங்கு பயணிப்பதை தவிர்க்கும்படியும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

லெபனான் அரசில் அந்நாட்டின் ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா செல்வாக்குச் செலுத்துவதாக குற்றம்சாட்டி சவூதி சில தினங்களுக்கு முன்னர் லெபனானுக்கான 4 பில்லியன் டொலர் உதவியை நிறுத்திய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவூதி வெளியுறவு அமைச்சு செவ்வாயன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், எந்தவொரு பிரஜையும் லெபனானுக்கு செல்லக்கூடாது என்றும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரஜைகள் முக்கிய தேவைகள் இன்றி லெபனானில் தங்கி இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியமும் தமது பிரஜைகள் லெபனான் செல்வதற்கு தடை விதித்திருப்பதோடு அந்நாட்டுடனான இராஜதந்திர உறவையும் குறைத்துள்ளது. பஹ்ரைனும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லெபனான் அரசியல் சவூதி ஆதரவு சுன்னி முகாம் என்றும் ஈரானின் ஷிய முகாம் என்று பாரிய பிளவுக்கு உள்ளாகியுள்ளது. அதேபோன்று அண்டை நாடான சிரியாவில் தொடரும் உள்நாட்டு யுத்தமும் லெபனான் அரசியலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY