அட்லாண்டிக் கடலில் எரிகல் விழுந்து பாரிய வெடிப்பு

0
139

ஹிரோஷிமா நகரை அழித்த அணு குண்டின் அளவு சக்தி கொண்ட பாரிய எரிகல் ஒன்று அட்லான்டிக் கடலில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி பிரேஸில் கடற்கரையில் இருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் அட்வான்டிக் கடலில் இந்த எரிகல் விழுந்துள்ளது. எனினும் இந்த எரிகல் கடல் மட்டத்தில் இருந்து 30 கிலோமீற்றர் ஆழத்தில் வெடித்திருப்பதால் வெளி உலகிற்கு அவதானிக்கப்படவில்லை.

இதன்போது 13,000 தொன் டி.என்.டி. சக்தி பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நாஸா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பொருள் 5 முதல் 7 மீற்றர் கொண்டதென கணித்திருக்கும் நாஸா, வளிமண்டலத்திற்குள் நுழையும்போது முழமையாக எரிந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்பொருளுக்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் பலம்மிக்க விண்பொருள் தாக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. மேற்படி சம்பவத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததோடு சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டன. ஆண்டுதோறும் பூமியின் வளிமண்டலத்தில் சுமார் 30 சிறிய விண்கற்கள் (1 மீ. முதல் 20 மீ. அளவு) எரிந்து விழுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY