166 ஓட்டங்கள் குவித்த இந்தியா

0
52

இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்தியா– வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் நாணயசுழற்சியில் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் மற்றும் தவானை ஓட்டங்கள் எடுக்க விடாமல் தடுமாற வைத்தார்கள்.

இருவரும் ஆரம்ப கட்ட ஓவர்களில் வேகமாக ஒட்டங்கள் குவிக்க முடியாமல் திணறினார்கள். தவான் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அல்-அமீன் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லியும் (8), ரெய்னாவும்(13) சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ரோகித் சர்மா வங்கதேச பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்தார்.

யுவராஜ் சிங் 16 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார். இதனை அடுத்து பாண்டியா களமிறங்கினார். இதன் பிறகு இந்தியாவின் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ரோகித் – பாண்டியா ஜோடி 18 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது.

கடைசி பந்தை சந்தித்த டோனி சிக்ஸ் அடிக்க, இந்தியா 20 ஓவரில் 166 ஓட்டங்கள் குவித்தது. ரோகித் சர்மா 55 பந்துகளில் 83 ஓட்டங்களும், பாண்டியா 18 பந்துகளில் 31 ஓட்டங்களும் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் அல்-அமீன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடி வந்தது.

LEAVE A REPLY