நடுவரை திட்டிய ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம்

0
145

இந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் 88 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய யார்க்கர் பந்து அவரது காலில் பட்டதாக கருதி ஆஸ்திரேலிய அணியினர் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் மார்ட்டின்ஸ், கனே வில்லியம்சன் ‘அவுட் இல்லை’ என்று அறிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தார். இதைத்தொடர்ந்து வீடியோவை ஆய்வு செய்ததில் ‘ஹாட்-ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பேட்டில் பந்து உரசுவது போன்ற அடையாளம் தெரிந்ததால் 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், கனே வில்லியம்சன் அவுட் இல்லை என்பதை உறுதி செய்தார்.

ஆனாலும் ‘ரீபிளேவை’ மைதானத்தில் உள்ள மெகாதிரையில் பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ஹேசில்வுட் ஆகியோர் 3-வது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடுகள நடுவர் மார்ட்டின்சிடம் வாக்குவாதம் செய்தனர். ஹேசில்வுட் நடுவரை மோசமான வார்த்தைகளால் திட்டினார். அது ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவானது. இதைத் தொடர்ந்து ஹேசில்வுட்டின் விதிமுறை மீறிய செயல் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

LEAVE A REPLY