காரமுனை ஆனைசுட்டகட்டு குளத்தின் நீர்ப்பாசன திட்டத்திற்கான முன்னோடிக்கூட்டம்

0
139

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இவ்வருடத்திற்கான சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்ப கூட்டங்களுக்கான ஆனைசுட்டகட்டு குளத்தின் நீர்ப்பாசன திட்ட விவசாயிகளுக்கான முன்னோடிக் கூட்டம் 2016.02.23ஆந்திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு காரமுனை கிராமத்தில் நடைபெற்றது.

இக்கூட்டமானது காரமுனை விவசாய அமைப்பின் தலைவர் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செங்கலடிப்பிரிவு மாகாண நீர்ப்பாசனத் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும், ஆனைசுட்டகட்டு குளத்தின் நீர்ப்பாசன திட்டத்திற்கு பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு. வீ. மதிகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

-எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY