கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்…

0
255

* மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால், கண்களானது துடிக்கும்.

* சரியான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்கள் துடிக்கும்.

* நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்றவற்றைப் பார்த்து கண்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுத்தால், கண்கள் அதிகம் துடிக்கும்.

* காப்ஃபைன் அதிகம் நிறைந்த பொருட்களான காபி, டீ போன்றவற்றை அதிகம் பருகினால், கண்கள் துடிக்கும்.

* மதுவை அதிகம் அருந்துவோருக்கும் கண்களானது அடிக்கடி துடிக்கும்.

* ஆய்வுகள் பலவற்றில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், தசைகளானது துடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், கண்கள் துடிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

* உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கண்களானது வறட்சி அடைந்து துடிக்கும்.

* கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும்.

LEAVE A REPLY