மேலும் இரு சுங்க அதிகாரிகள் இன்று கைது

0
191

சுங்க அதிகாரிகள் இருவர் இன்று புதன்கிழமை (24) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக 125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று சுங்க அதிகாரிகள் கடந்த வருடம் ஒக்டோபர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறியே, இன்று குறித்த இரண்டு அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வசந்த விமலவீர மற்றும் உபாலி விக்ரமசிங்க ஆகிய இரு அதிகாரிகளே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

LEAVE A REPLY