முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கில் தமக்­கென ஓர் தனி நாடு வேண்­டு­மெனக் கேட்­க­வில்லை: ஹஸன் அலி

0
202

முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கில் தமக்­கென ஓர் தனி நாடு வேண்­டு­மெனக் கேட்­க­வில்லை. வடக்கு– கிழக்கு இணைக்­கப்­பட்டால் அதற்குள் தமக்கு நிலத் தொடர்­பற்ற தனி முஸ்லிம் மாகாணம் வழங்­கப்­பட வேண்­டு­மென்றே கேட்­கி­றார்கள். இதுவே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் கோரிக்­கை­யா­கவும் இருந்­தது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தத்தில் இது உள்­வாங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாடும் இதுவே எனவும் கூறினார். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு தமி­ழர்­க­ளுக்கு தனி அலகு வழங்­கப்­ப­டு­வ­தா­யி­ருந்தால் அதற்குள் முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிலத் தொடர்­பற்ற தனி முஸ்லிம் மாகாணம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

அவ்­வாறு தனி மாகாணம் வழங்­கப்­பட்­டா­லேயே முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அது தீர்­வாக அமையும். இப்­போ­துள்ள கிழக்கு மாகாண சபையில் முத­ல­மைச்­ச­ராக ஒரு முஸ்லிம் இருந்­தாலும் இது எமக்­கு­ரி­ய­தல்ல.

கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தென்றால் தமிழ் மக்­க­ளோடும் சிங்­கள மக்­க­ளோடும் சண்­டை பி­டிக்க வேண்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஒரு நிரந்­தர முத­ல­மைச்சர் பெற்றுக் கொள்­வ­தா­யி­ருந்தால் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­யான மாகாண சபை­யி­னா­லேயே அது முடி­யு­மாக இருக்கும்.

வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு தனி அல­காக முஸ்லிம் மாகாணம் வழங்­கப்­பட்டால் வடக்கு கிழக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களின் நிலை என்ன என்று சிலர் வின­வு­கி­றார்கள்.

வட– கிழக்கில் நிறு­வப்­படும் முஸ்­லிம்­க­ளுக்­கான மாகாண சபை வட கிழக்­குக்கு வெளியே இருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் எழுப்பும்.

இப்­போது வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்கள் பற்றி கவ­லைப்­படும் வட கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இது பற்றி ஏற்­க­னவே சிந்­தித்­தி­ருக்க வேண்டும்.

முன்னாள் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­தி­ருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை மாத்திரமல்ல நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY