எதிரணியை முஸ்தாபிஜூர் ரகுமான் அச்சுறுத்துவார்: வங்கதேச அணித்தலைவர் மோர்தசா

0
138

இளம் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரகுமான் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று வங்கதேச அணித்தலைவர் மோர்தசா கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்திய அணியை தனது வேகத்தால் மிரள வைத்தார். இதனால் வங்கதேச மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது.

இந்நிலையில் ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றது.

இது தொடர்பாக பேசிய வங்கதேச அணித்தலைவர் மோர்தசா, “நாங்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நல்ல நிலையில் இல்லை. அதற்காக நாங்கள் முன்னேற்றம் அடையவில்லை என்றில்லை.

டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாவதற்கு இந்த ஆசியக்கிண்ணத் தொடர் எங்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.

மேலும், எங்கள் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் விதவிதமாக பல உத்திகளுடன் பந்து வீசுக்கூடியவர். அதை அவர் களத்தில் எப்படி செயல்படுத்த போகிறார் என்பது தான் முக்கியம்.

அவர் தனது பந்து வீச்சில் எப்படி அசத்துவது என்பதில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

அதேசமயம் எதிரணி வீரர்கள் அவரின் வியூகங்களை தகர்க்க கவனம் செலுத்தலாம். ஆனால் அதற்கு பலன் கிடைக்காமல் போக கூட வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY