முஸ்லிம் நாட்டில் ‘ரெட் லைட்’ பகுதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

0
188

உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் 100 இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, தெற்காசியாவின் மிகப்பெரிய விபசார மையமாக விளங்கிவந்த அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயா நகரில் இருந்த அனைத்து விபசார விடுதிகளும் கடந்த 2014ம் ஆண்டு முழுமையாக மூடப்பட்டன.

பின்னர், அடுத்தடுத்து இதுவரை 68 ரெட் லைட் பகுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

தற்போது, தலைநகர் ஜகார்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து விபசார விடுதிகளையும் வெளியேற்றுமாறு ஜகார்தா நகர ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அங்குள்ள விடுதிகளை இல்லாதொழித்து அதில் இருக்கும் பெண்களை வெளியேற்றும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

2019ஆம் ஆண்டுக்குள் விபசாரமற்ற நாடாக இந்தோனேசியாவை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அந்நாட்டின் சமூகநலத்துறை அமைச்சர் கோஃபிபா இந்தர் பரவான்ஸா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Virakesari)

LEAVE A REPLY