(Update) மாயமான நேபாள விமானம் விபத்து; அனைவரும் பலி

0
120

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது.

போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ´தாரா ஏர்´ நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில், இரு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உட்பட 20 பயணிகள் இருந்தனர்.

அத்துடன் விமானி மற்றும் ஊழியர்களுடன் சேர்த்து 23 பேர் பயணித்த குறித்த விமானம், ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

மேலும், அதில் சென்ற அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

(Adaderana)

LEAVE A REPLY